Freelancer / 2025 மார்ச் 10 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரான கார்னி, முதல் வாக்கெடுப்பிலேயே வெற்றி பெற்றார்.
கியூக்கஸ் கிளர்ச்சி மற்றும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அமைச்சரவையிலிருந்து விலகியதை அடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி தொடக்கத்தில் பதவி விலகும் எண்ணத்தை அறிவித்ததால் இந்தத் தேர்தல் நடந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்த கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் கார்னி, கனடாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார்.
மார்க் கார்னி இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை, அவர் நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை. கார்னி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னும் தெரியவில்லை. R
8 minute ago
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
1 hours ago