2025 மே 15, வியாழக்கிழமை

கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு

Freelancer   / 2023 ஜூன் 11 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ் நாட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கப்பலில் அடையாளம் தெரியாத சிலர் ஏறியிருந்ததைக் கண்டு கப்பல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கப்பல் மாலுமி உள்ளிட்ட ஊழியர்கள் கப்பலின் இஞ்சின் அறைக்குள் தங்களை பூட்டிக்கொண்டு இருந்துள்ளனர். மேலும் இது குறித்து இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு படையினருக்கு அபாய சமிக்ஞை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர், கப்பலில் இருந்த ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நப்லேஸ் பகுதியின் தெற்கு பகுதியில் இருக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களில் சிலர் ஆயுதமேந்தி இந்த செயலில் ஈடுபட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .