Editorial / 2026 ஜனவரி 04 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கைது செய்த பிறகு முக்கியமான செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கியூபாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையின் ஒரு பகுதியாக கியூபா முக்கிய விவாதமாக வரலாம் என்று டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வெனிசுலா மற்றும் கியூபாவின் நிலைமை ஓரே மாதிரியாக உள்ளது என்று கூறிய டிரம்ப், விரைவில் கியூபாவில் நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் கியூபாவிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கியூபா அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் Western Hemisphere-ல் அமெரிக்க ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கியூபா அடுத்த இலக்காக இருக்கலாம் என்று ரூபியோவின் கருத்து காட்டுகிறது. இது உலக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நடவடிக்கைக்குப் பிறகு, ஹவானாவில் அரசில் தான் பணியாற்றி இருந்தால் குறைந்தபட்சம் சற்று கவலைப்படுவேன் என்று மார்கோ ரூபியோ கூறினார். வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளிலும் நீண்ட காலம் விமர்சனம் செய்து வந்த மார்கோ ரூபியோ, இந்த கருத்தை செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.
கியூபா ஜனாதிபதி Miguel Diaz-Canel, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹவானாவில் நடந்த பேரணியில் வெனிசுலா கொடியை ஏந்திய டியாஸ்-கேனல், மதுரோவின் கைது சம்பவத்தை கண்டித்தார்.
இது வெனிசுலா - கியூமா நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான உறவை மீண்டும் காட்டியுள்ளது. கியூபா வெனிசுலாவின் மிக முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது, அரசியல், பொருளாதாரம், சித்தாந்த ரீதியாக இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்துள்ளன. மேலும் டியாஸ்-கேனல் அமெரிக்காவின் வெனிசுலா தாக்குதலை "அரசு பயங்கரவாதம்" என்று கண்டித்தார் X தளத்தில் பதிவு வெளியிட்டார்
9 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
35 minute ago
42 minute ago