2024 ஜூன் 17, திங்கட்கிழமை

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு

Editorial   / 2024 மே 26 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இன்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும்   மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன.

இதனால் இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து கவர்னர் ஜெப் லாண்ட்ரி அதற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த இரு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

எனவே டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இன்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X