2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்

Mithuna   / 2024 ஜனவரி 31 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்சில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார்.

அதன்படி பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது பாராளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேறியது. இதன்பிறகு இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு பெரும்பான்மை பெற்றால் இது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X