Freelancer / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் தீவு மாகாணங்களில் ஒன்றான தாஸ்மானியாவின் வடமேற்கு கடற்கரையோர பகுதியில், 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் செவ்வாய்க்கிழமை (18) மாலை கரையொதுங்கின.
இதனை தொடர்ந்து, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் அந்த பகுதிக்கு சென்று அவற்றை கடலுக்குள் மீண்டும் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், வானிலை மோசமடைந்த நிலையில் அவற்றை கடலில் விடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இதே வானிலை நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அவற்றில் 90 திமிங்கலங்களே இன்று உயிருடன் உள்ளன என தெரியவருகிறது.
உருவத்தில் திமிங்கலங்களை போன்று காணப்பட்டாலும், இவை டால்பின் குடும்பத்தில் வருபவை. 3,000 கிலோகிராம் எடையுடன், பொதுவாக கடற்கரையில் இருந்து சற்று உள்ளடங்கிய பகுதியில், கடலின் ஆழத்தில் வசிப்பவை. இந்த திமிங்கலங்கள் கடற்கரைக்கு வந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இவற்றை காப்பாற்ற முடியாத மற்றும் கடலுக்குள் திருப்பி விட முடியாத சூழலில், கடைசியாக அவற்றை கருணை கொலை செய்யும் முடிவு எடுக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுவாக தாஸ்மானியா பகுதியில், பைலட் வகை திமிங்கலங்கள் இதுபோன்று அதிக அளவில் கடந்த காலங்களில் கரையொதுங்கின. இந்நிலையில், 1974ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இவ்வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago