2025 மே 01, வியாழக்கிழமை

கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீனால் மக்கள் அச்சம்

Freelancer   / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலின் அடிப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் வசிக்கக் கூடிய டூம்ஸ்டே மீன் (doomsday fish) ஒன்று மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. 

வழக்கமான மீன்களை போல இன்றி நீளமான உடல்வாகு மற்றும் மிளிரும் தன்மை கொண்ட மீனாகும்.

இந்த மீன் திடீரென கடலோரத்தில் கரை ஒதுங்கிருப்பது அபாயமிக்க ஒன்றாக சொல்லப்படுகிறது. ஏனெனில் பேரழிவு நெருங்கும்போது மட்டுமே இந்த மீன்கள் ஆழ்கடல் பகுதியை விட்டு வெளியே வரும் என புராணக்கதைகள் கூறுவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் 20க்கும் மேற்பட்ட டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கின. அதே ஆண்டு ஜப்பானில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஜப்பான் வரலாற்றில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .