Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் தென் கலிபோர்னியக் கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த படகொன்று தீப்பற்றி மூழ்கியதையடுத்து 25 பேரின் சடலங்களை தாங்கள் கண்டிபிடித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க கரையோரக் காவற்படை நேற்றிரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒன்பது பேரைக் காணவில்லை.
20 சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும், மேலும் ஐந்து சடலங்கள் இருக்குமிடத்தை அடையாளங்கண்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க கரையோரக் காவற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் மத்தியூ குறொல் தெரிவித்துள்ளார்.
லொஸ் ஏஞ்சலஸுக்கு வட மேற்காகவுள்ள சனல் தீவுகளில் ஆழ்கடலுக்கு செல்லும் மூன்று நாள் பயணித்திலிருந்த குறித்த படகுக்கு கீழ் காணப்படும் பாதுகாப்பில்லாத நிலைமைகள் காரணமாக குறித்த ஐந்து சடலங்களையும் மீட்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட சடலங்களில் மூழ்குதலுடன் சம்பந்தப்பட்ட காயங்கள் காணப்பட்டதாக மத்தியூ குறொல் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீ பரவத் தொடங்கையில் தப்பித்த ஐந்து கப்பற் சிப்பந்திகள், அருகிலுள்ள படகொன்றிலிருந்தவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, படகில் 30க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க கரையோரக் காவற்படையின் லொஸ் ஏஞ்சல்ஸ் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தொழிலாளர் தின விடுமுறைநாளான நேற்று, சனல் தீவுகளுக்கு சுழியோடிகளைக் கொண்டு செல்வதற்கான பயணத்தில் படகு இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த படகை இயக்கும் சன்டா பார்பராவைத் தளமாகக் கொண்ட வேர்ள்வைட் டைவிங் அட்வென்ஞ்சர்ஸ், இவ்வாறான பயணங்களில் 1972ஆம் ஆண்டு முதல் ஈடுபடுவதாக தமது இணையத்தளத்தில் கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த வாரயிறுதி குறித்த படகுப் பயணமானது நேற்று மாலையில் திரும்புவதாக இருந்துள்ளது.
இந்நிலையில், எப்போது காணாமல் போனவர்களை படகில் சுழியோடிகள் தேடலாம் என்பது உடனடியாகத் தெளிவில்லாமல் உள்ளது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago