2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கல்விக்கடனை ரத்து செய்தார் ஜோ

Mithuna   / 2024 ஜனவரி 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலர் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கல்விக்கடனை இரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை ரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருந்தார்.

இந்தநிலையில் சுமார் 5 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 1,597,957,000,000) கல்விக்கடனை இரத்து செய்வதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதன்மூலம் 74 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது ஆசிரியர், தாதியர் என அரசு ஊழியர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X