Editorial / 2019 ஜூன் 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்ட கழிவறைகளில், மகாத்மா காந்தி மற்றும் அசோக சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்ட டைல்ஸ் பதிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கிராம வளர்ச்சித்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், புலந்தர்ஷா பகுதியில், தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ், 508 கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இதில், திபாய் தெஹ்சில் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 13 கழிவறைகளில், மகாத்மா காந்தி மற்றும் அசோக சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட கிராம வளர்ச்சித்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன், 2018ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் கட்டித்தரப்பட்ட மானிய விலை வீடுகளில், பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவ்கானின் படங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், படங்களை உடனடியாக அகற்ற, உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்திலுள்ள கழிப்பறைகளில் மகாத்மா காந்தி மற்றும் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளமையானது, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .