2025 மே 19, திங்கட்கிழமை

கழுத்துப் பட்டி அணிவதை நிறுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலைக்குச்  செல்வபவர்கள் தங்கள் கழுத்தில் கழுத்துப் பட்டி  அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்  என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலையின் தாக்கம் மிகவும்  அதிகமாக உள்ளது.
குறிப்பான  ஸ்பெயினில் 40  பாகை செல்சியஸ்ஸுக்கும் அதிகமாக வெப்பநிலை  காணப்படுவதாகவும் இதனால் அந்நாட்டு மக்கள்  கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள டெலோடோ பகுதியில் உள்ள காடுகளில், வெப்ப அலை மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு, சுமார் சுமார் 90,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரம், செடி உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நேற்று (31) செய்தியாளர்களைச்  சந்தித்து இது குறித்து  பேசிய போது,” நாட்டில்  சராசரி வெப்பநிலை உயர்ந்துள்ளதால் நாட்டுமக்கள்  பணிடங்களுக்குச் செல்லும் போது தங்கள் கழுத்தில் கழுத்துப் பட்டி அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் காற்றோட்டத்தை அதிகரிக்கலாம் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X