2025 மே 02, வெள்ளிக்கிழமை

’காசா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்’

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
 
அமெரிக்காவிற்கு தற்போது விஜயம் செய்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
 
ஜனாதிபதி ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, இஸ்ரேலியப் பிரதமர் அந்த நாட்டிற்கு வருகை தரும் முதல் அரச தலைவர் ஆவார்.
 
இதன்போது, காசா பகுதிக்கு வெளியே பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கான பொறுப்பையும் அமெரிக்கா ஏற்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .