2025 ஜூலை 09, புதன்கிழமை

காசா எல்லை திறக்கப்பட்டது

Freelancer   / 2023 நவம்பர் 02 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கட்டடங்கள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. சில ஏவுகணைகள் தவறுதலாக குடியிருப்புகள், முகாம்களில் மீது விழுந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர்  காயம் அடைந்துள்ளனர்.

மேலும் காசா எல்லை மூடப்பட்டதால் பலத்த காயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந் நிலையில் மீண்டும் காசா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை , வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் நூற்றுக்கணக்கானோர் மற்றும் பலத்த காயம் அடைந்தோர், எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .