2025 மே 14, புதன்கிழமை

“காசா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்”

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான  அல்-ஷிபாவில் காயம் அடைந்தோர், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள நிலையில். இந்த மருத்துவமனை இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மறைந்து கொண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது இஸ்ரேல் குற்றச்சாட்டை காசா மறுத்துள்ளது. மேலும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும்? என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு” எனக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது கவலையை இஸ்ரேலிடம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு, “மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X