2025 மே 14, புதன்கிழமை

காசாவுக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை (18)  இஸ்ரேலுக்கு சென்றார்.

அதனை தொடர்ந்து டெல் அவிவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜோ பைடனும், பெஞ்சமின் நேதன்யாகுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது ஜோ பைடன், " காசாவில் உள்ள வைத்தியசாலையில் மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்து நான் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் அடைந்தேன். நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இந்த தாக்குதல் மற்ற குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரிகிறது, இஸ்ரேல் அல்ல" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு எளிய காரணத்திற்காக இங்கே இருக்கிறேன். அமெரிக்கா எங்கு நிற்கிறது என்பதை இஸ்ரேல் மக்களும் உலக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஹமாஸ் அமைப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். தீமைகள் மற்றும் அட்டூழியங்களைச் செய்துள்ளனர். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையானதை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார்.

மேலும் அவர் காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என அறிவித்தார். அதன் பின்னர், போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததற்கு ஜோ பைடனுக்க பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் காசா பகுதிக்கு குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்தை அனுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X