2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காதலனைப்பழிவாங்க இப்படியா செய்வது?

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் தன்னை ஏமாற்றிய காதலனைப்  பழிவாங்க பெண்ணொருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
அவுஸ்திரேலியாவின்  குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி. இவர் தனது காதலனை  விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக அந்நாட்டில் வெளியாகும் மெக்கே அன்ட் விட்சன்டே லைப் (Mackay and Whitsunday Life) என்ற செய்தித்தாளில் அண்மையில் ஒரு முழு பக்க விளம்பரமொன்றை கொடுத்துள்ளார்.

குறித்த  விளம்பரத்தில் ”டியர் ஸ்டீவ், நீ அவளுடன் சந்தோஷமாக இருப்பாய் என நினைக்கிறேன். இப்போது இந்த முழு நகரமே  நீ எவ்வளவு மோசமான ஏமாற்றுக்காரன் என்ற உண்மை அறிந்து கொள்ளும். இப்படிக்கு ஜென்னி. பின்குறிப்பு, இந்த விளம்பரத்தை உனது கிரெடிட் கார்டை பயன்படுத்தித் தான் வெளியிட்டுள்ளேன்". இவ்வாறு ஜென்னி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  குறித்த பதிவுக்கு 6,500க்கும் மேற்பட்ட லைக்குகளும், 2,000க்கும் அதிகமான ஷேர்களும், 3,000க்கும் அதிகமான கமெண்டுகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X