2025 மே 15, வியாழக்கிழமை

காதலிக்கு 100 மில்லியன் யூரோவை உயில் எழுதிய முன்னாள் பிரதமர்

Freelancer   / 2023 ஜூலை 11 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமரும், இத்தாலி அரசியலின் கிங் மேக்கருமாக இருந்த மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, தனது காதலிக்கு 900 கோடி ரூபாய் சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார்.

இத்தாலியில் மூன்று முறை பிரதமராக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. 86 வயதான இவர், ரத்தப் புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் 12ம் திகதி உயிரிழந்தார். இதையடுத்து அவரின் சொத்துக்கான உயில் சில தினங்கள் முன் அவரின் ஐந்து குழந்தைகள் முன் வாசிக்கப்பட்டது. அதன்படி, ஃபின்இன்வெஸ்ட் என்று பெர்லுஸ்கோனி குடும்பம் நடத்தி வரும் கம்பெனிகளில் இருந்து இனி கிடைக்கும் பங்குகள் ஆகியவற்றை ஐந்து குழந்தைகளுக்கும் சமமாக பிரித்து கொடுத்துள்ளார்.

இதேபோல், தனது சகோதரர்கள் இருவருக்கும் ஆகியோருக்கு 130 மில்லியன் யூரோக்களை கொடுக்கும்படி உயில் எழுதி வைத்துள்ள பெர்லுஸ்கோனி, அதேசமயம் தனது காதலியான மார்டா ஃபேசினாவுக்கு 100 மில்லியன் யூரோக்களை கொடுக்கும்படி கூறியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .