2025 மே 14, புதன்கிழமை

காதலியை கடத்திச்சென்ற ஹமாஸ்: காத்திருக்கும் காதலன்

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீது கடந்த (07) ஆம் திகதி தரை, கடல் மற்றும் வான்வழியே தாக்குதலை தொடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பலரை பணய கைதிகளாகவும் பிடித்து சென்றது இந்த தாக்குதலில் இசை திருவிழாவில் கலந்து கொண்ட 260 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி சென்றனர். 210 பேரை சிறை பிடித்து சென்றனர்.

அவர்களில் இன்பார் ஹைமன் (வயது 27) என்பவரும் ஒருவர். இஸ்ரேலின் ஹைபா நகரை சேர்ந்த அவர் ஓவிய மாணவியாவார். இசை திருவிழாவின்போது, தன்னார்வலராக கலந்து கொண்ட அவர், ஹமாஸ் தாக்குதலின்போது மற்றவர்களோடு சேர்ந்து தப்பி செல்ல முயன்றார்.

இதன்போது துப்பாக்கி சூடு சத்தத்துடன் மக்கள் அலறியடித்தபடி, வயல்வெளி பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை நோக்கி ஓடினர். ஆனால், ஹைமனை (காதலியை) பயங்கரவாதிகள் பிடித்து விட்டனர். அவருடைய 2 நண்பர்கள் இதில் தப்பி விட்டனர்.

காதலியை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய காதலர் நோவாம் ஆலன் (வயது 24) அதிகாரிகளுடன் பேசிவருகிறார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X