Editorial / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏமன் அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடம்பெயர்வு நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.
ஷமொத்தம் 154 பேர் பயணித்த இந்த படகு, ஏமனின் தெற்கு அப்யான் மாகாணத்தில் உள்ள கான்ஃபார் மாவட்டத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை கடலுக்கு புறப்பட்டு, அரபு வளைகுடா நாடுகளை அடைய முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், காயமடைந்தவர்கள் ஜிஞ்சிபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 54 உடல்கள் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வகை படகுகளில் பயணிக்கும்போது அதிக எண்ணிக்கையிலான குடியேறிகள் பாதுகாப்பின்றி கடத்தல்காரர்களால் அனுப்பப்படுவது சாதாரணமாகிவிட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி புறப்படும் குடியேறிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். கடந்த மாதங்களிலும் ஏமன் கடற்பகுதியில் இத்தகைய படகு விபத்துகள் பல நிகழ்ந்துள்ளன. மார்ச் மாத இதேபோல் நான்கு படகு விபத்தில் இருவர் உயிரிழந்தும், 186 பேர் காணாமல் போனதாகவும் IOM தெரிவித்துள்ளது. மனிதக் கடத்தலின் பயங்கரமான விளைவுகளை இந்த சம்பவம், சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025