Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

காஸாவுக்கான தி குளோபல் சுமுட் படகுத் தொகுதியின் பிரதான படகொன்றின் மீது ட்ரோனொன்றால் துனீஷியக் கடற்பரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் ஆறு பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக இன்று அப்படகுத் தொகுதி தெரிவித்துள்ளது.
கப்பலுக்குள்ளிருந்தே வெடிப்புத் தோன்றியதாக துனீஷிய அதிகாரிகள் தெரிவித்ததுடன், படகுத் தொகுதி மீதான ட்ரோன் தாக்குதல் அறிக்கைகளில் அடிப்படை உண்மை இல்லை என துனீஷிய தேசிய காவலர் பேச்சாளர் கூறியுள்ளார்.
படகுத் தொகுதியை வழிநடத்தும் செயற்குழுவை காவிச் சென்ற போர்த்துக்கல் கொடியையுடைய படகானது அதன் பிரதான தளத்திலும், அதற்கு கீழேயான சேமிப்புத் தொகுதியிலும் தீயால் சேதமேற்பட்டதாக படகுத் தொகுதி தெரிவித்துள்ளது.
1 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Jan 2026