Editorial / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் இருதய சத்திரசிகிச்சையொன்றுக்கு உள்ளானதுடன், கடுமையான ஆபத்திலிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து தலைவர் கிம் நோய்வாய்ப்பட்டுள்ள அறிக்கைகளில் தென்கொரிய சீன அதிகாரிகள் இன்று சந்தேகித்துள்ளனர்.
இம்மாதம் 12ஆம் திகதி சத்திரசிகிச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து தலைவர் கிம் குணமடைந்து வருவதாக வடகொரியாவிலுள்ள பெயர் குறிப்பிடாத தகவல்மூலத்தை மேற்கோள்காட்டி தென்கொரியத் தலைநகர் சியோலைத் தளமாகக் கொண்ட டெய்லி என்.கே நேற்றிரவு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து தலைவர் கிம் கடும் ஆபத்திலிருப்பதான புலனாய்வை ஐக்கிய அமெரிக்கா கண்காணிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி வெளியிட்டிருந்ததுடன், சத்திரசிகிச்சையின் பின்னர் தலைவர் கிம்மின் நிலை மோசமடைந்ததாக வெள்ளை மாளிக்கைக்கு கூறப்பட்டுள்ளதாக பெயரிடப்படாத ஐக்கிய அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி புளூம்பேர்க் செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை, தலைவர் கிம் சத்திர சிகிச்சைக்கு உள்ளானாரா என விவரிக்காமல் சி.என்.என்னின் அறிக்கையை தென்கொரிய அரசாங்க அதிகாரிகள் இருவர் மறுதலித்துள்ளதுடன், வடகொரியாவில் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் எதுவுமில்லை என தென்கொரிய ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது.
தவிர, வடகொரியாவுடன் தொடர்பாடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச தொடர்பாடல் திணைக்களமானது கிம் கடும் சுகவீனமுற்றுள்ளார் என்பதை நம்பியிருக்கவில்லை.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago