2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கிரீசில் 200 முறை நிலநடுக்கம்

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவு அமைந்துள்ள கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் பதிவாகின.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது..

இதனையடுத்து, நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X