2025 நவம்பர் 05, புதன்கிழமை

குன்டுஸ் மோதலில் 40 பேர் உயிரிழப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் மாகாணத்தில் இராணுவத்துக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள், பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மைகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அந்நாட்டின் இராணுவம்,  பொலிஸார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குன்டுஸ் மாகாணத்தின் தலைநகரான குண்டுஸ் நகரில் பயங்கரவாதிகளுக்கு இராணுவத்துக்கும் இடையில் இன்று (01) நடந்த மோதலில் 38 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படைகளை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

குன்டுஸ் நகரை கைப்பற்றும் பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க அங்கு தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அங்குள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களை சிறைபிடித்து அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக ஆப்கானிஸ் தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X