Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல் காவி அகமது யூசுபாலேயே, நேற்று (17) மாலை, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்துடன், குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறும், சர்வதேச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 16 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 15 நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை ஒரு மனதாக வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த வழக்கை விசாரணை செய்த பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
பாகிஸ்தானின் குறித்த தீர்ப்பை எதிர்த்த இந்தியா, நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளில், குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago