2025 மே 03, சனிக்கிழமை

குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிக்க புதிய திட்டம் அமுல்

Freelancer   / 2024 டிசெம்பர் 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, வாரத்தில் 4 நாட்கள் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

ஜப்பானில், கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு வீதம் சரிவடைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு   சதவீதம் 5.6  ஆக குறைந்து 727,277 ஆக பதிவானது. 

இதை கருத்தற்கொண்டு, ஜப்பானில் பிறப்பு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்படவுள்ளதாக, டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும், ஆளுநர்  யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X