2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குழந்தை பெற்றால் 13 லட்சம் ரூபாய் பரிசு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}



உலக நாடுகள் பலவற்றில் அண்மைக்காலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவடைந்து கொண்டே செல்வதால் பல நாடுகள் புதுப்புது அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில்  குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவாக இலங்கை மதிப்பில் சுமார் 13 லட்சம்  ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இப்புதிய திட்டமானது வரும்  2023ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .