2025 மே 19, திங்கட்கிழமை

கைக்கடிகாரங்கள் மூலம் கண்காணிக்கும் சீனா

Freelancer   / 2022 ஜூலை 25 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடியாணை பிறப்பிக்கும் அளவுக்கு கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடாத நபர்களைக் கண்காணிப்பதற்கு மின்னணு கைக்கடிகாரங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி வருவதாக சீன வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு புதிய குற்றவியல் நீதிக் கொள்கையின் கீழ் குறைவான கைதுகள் மற்றும் வழக்குகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருபதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை, கொள்ளை போன்ற கடுமையான வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வந்தாலும், பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனைக் கருத்திற் கொண்டே இந்த நீதிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர்.  

20 ஆண்டுகளுக்கு முன்பு 91.4 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 32.7 சதவீதமாகக் குற்றங்கள் குறைந்துள்ளதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் கூறுகின்றனர். 

கைதுக்கு உத்தரவாதமில்லாத குறைவான குற்றத்தைச் செய்தவர்கள் தொடர்பான வழக்குகளை  தொடர வேண்டாம் என்று தீர்மானித்து இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றங்களுக்கான அபராதங்களை அரசாங்க அலுவலகங்களுக்கு அனுப்பலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீட்டுக் கண்காணிப்பில் இருக்கும் சந்தேக நபர்களை அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க மின்னணு கைக்கடிகாரங்கள் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை அததிகரிகள் பயன்படுத்துகின்றனர்.

குறித்த கடிகாரங்களை 24 மணி நேரமும் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன், உடனடி தகவல்களை அலை தருவதாக செங்டு பொலிஸார் ரெட் ஸ்டார் நியூஸிடம் தெரிவித்தனர்.

2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சட்ட விரோதமான நிதி சேகரிப்பு, தொலைத்தொடர்பு மற்றும் ஓய்வூதிய மோசடியில் ஈடுபட்ட 200,000 க்கும் மேற்பட்டோரை வழக்கறிஞர்கள் பின்தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X