2024 மே 14, செவ்வாய்க்கிழமை

கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம்

Ilango Bharathy   / 2022 ஜூன் 01 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை முடக்கம் செய்யவுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் உவால்டே நகரில் பாடசாலை ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனா்.
இத்  துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இவ் அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .