Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிய கொரனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 361ஆக அதிகரித்து, 2003ஆம் ஆண்டு சார்ள்ஸ் வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை விட கொரனாவைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீனாவில் சார்ள்ஸ் வைரஸ் காரணமாக 349 பேர் உயிரிழந்திருந்தன. சீனாவிலிருந்தே ஆரம்பமான சார்ள்ஸ் வைரஸால் மொத்தமாக 774 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், ஏனைய உயிரிழப்புகள் பெரும்பாலும் ஹொங் கொங்கிலேயே நிகழ்ந்திருந்தன.
மத்திய சீன நகரமான வுஹானில் கடந்தாண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கொரனாவைரஸால் இதுவரையில் ஒரே நாளில் ஏற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புதிய உயிரிழப்புகளின் மிகப்பெரிய இறப்பாக 57 புதிய உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து செல்லும் மக்களுக்கு எதிர்பாராதளவு தடைகளை பல அரசாங்கங்கள் விதித்துள்ளபோதும் கொரனாவைரஸானது 24க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், இன்று பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளில் 56 உயிரிழப்புகள் வுஹான், வுஹானுள்ள ஹுபெய் மாகாணத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, சீனாவுக்கு அண்மையில் விஜயம் செய்த வெளிநாட்டுப் பிரஜைகளை தமது நாட்டுக்குள் நுழைவதை ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல் ஆகியன தடை செய்துள்ள நிலையில், மொங்கோலியா, ரஷ்யா, நேபாளம் ஆகியவை தமது நில எல்லைகளை மூடியுள்ளன.
இந்நிலையில், வுஹானில் கொரனாவைரஸால் பீடிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக எட்டு நாட்களில் உருவாக்கப்பட்ட வைத்தியசாலையொன்று நோயாளர்களை இன்று பெற ஆரம்பிக்கும் என சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இவ்வைத்தியசாலை 1,000 படுக்கைகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், 1,600 படுக்கைகளை உடைய இன்னொரு வைத்தியசாலையையும் சீனா உருவாக்குகின்ற நிலையில் அது நாளை மறுதினம் பூரணமாகவிருக்கின்றது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago