Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரனாவைரஸால் பூகோள ரீதியில் 2,000க்க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், சீனாவில் 56 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், கொரனாவைரஸ் பரவுவது பலமாகுவதாகவும், தொற்றாகுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரனாவைரஸ் பற்றி தகவலானது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் அமைச்சர் மா ஸியோவெய், செய்தியாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.
கொரனாவைரஸின் குணங்குறிகள் தென்படுவதற்கான காலமானது ஒன்றிலிருந்து 14 நாள்கள் வரையில் காணப்படலாமெனவும் குறித்த காலத்தில் தொற்று ஏற்படலாம் எனவும் மா ஸியோவெய் தெரிவித்துள்ளார்.
சட்டரீதியற்ற முறையில் காட்டுவிலங்குகளை விற்கும் மத்திய சீன நகரமான வுஹானிலுள்ள கடலுணவுச் சந்தையொன்றிலிருந்து கடந்தாண்டு இறுதியில் உருவாகியதாக நம்பப்படும் கொரனாவைரஸ் ஆனது தற்போது சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷங்காய் உள்ளிட்ட சீன நகரங்களுக்கும், ஐக்கிய அமெரிக்கா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடாவுக்கு பரவியுள்ளது.
சந்தைகள், உணவகங்கள், மின் வணிகத் தளங்களில் காட்டுவிலங்குகளை விற்பனை செய்வதற்கான தேசியளவிலான தடையொன்றை இன்று சீனா அறிவித்திருந்தது.
கொரனாவைரஸ் பரம்பலை பூகோள சுகாதார அவசரநிலையொன்று என உலக சுகாதார ஸ்தாபனம் அழைக்காதபோதும் சீனாவால் இதன் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியுமா என சுகதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், நேற்று வரையில் கொரனாவைரஸால் 1,975 நோயாளர்கள் பீடிக்கப்பட்டுள்ளதாக இன்று உறுதிப்படுத்தியுள்ள சீனா, கொரனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 56ஆக உயந்துள்ளதாக அரச தொலைக்காட்சி சி.சி.டி.வி தெரிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago