2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொரொனாவுக்கு பலியாகி வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரொனா கிருமித்தொற்றுக்குப் பலியாகி வருவோரின் எண்ணிக்கை சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று (11) காலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அங்கு 1,011 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருமிப் பரவலுக்குக் காரணமான ஹூபெய் மாநிலத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருமித்தொற்றால் மேலும் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 42,000ஐக் கடந்துவிட்டது.

ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் இதுவரை 10.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் நகரில் வசிக்கும் 99 சதவீதமானோர்.

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடம் மீண்டும் கிருமித்தொற்றியதற்கான அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், புதிய வகை கிருமித்தொற்றைச் சமாளிப்பதற்கான எதிர்ப்புச் சக்தி குணமடைந்தவர்களிடம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய கூடுதல் ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .