2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொரோனா தொற்று தடுப்பூசி பரிசோதனை இன்று ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தொற்றுத் தடுப்பூசி மனிதர்கள் மீதான பரிசோதனை இன்று (23) முதல் ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள “COVID-19 தடுப்பூசி” மனிதர்கள் மீதான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு, செவ்வாய்க்கிழமை (21) அறிவித்திருந்தது.

கடந்த வாரம் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிவேக தடுப்பூசித் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டெம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினர். அதன்படி, தடுப்பூசித் தயாரிப்பு பணிகள் துரிதமாக நிறைவடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X