Editorial / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. உலக அளவில் 190க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,000-த்தைத் தாண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,201,476 ஆக காணப்படுகின்றது. 246,467 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,362-த்தைத் தாண்டியுள்ளது. ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,947-த்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் இதுவரையில் 311,357 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,452 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இத்தாலியில் 124,632 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago