Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன வைத்தியர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தான் கொரோனா பரவியது என கூறப்படுவது தற்போது முழு அளவில் நிரூபணமாகி இருக்கிறது.
சீனாவின் வூஹான் வைத்தியசாலையில் ஒரு நோயாளி இருமல் காய்ச்சலுடன் டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி வந்துள்ளார்.
இவருக்கு இந்த வைத்தியசாலையின் தலைமை பெண் மருத்துவர் ஏய் பென் இந்த நோயாளிக்கு ரத்த பரிசோதனை முடிவை பார்க்கிறார்.
முதலில் சார்ஸ் , புளூ காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த டாக்டர் தனது மருத்துவ குழுவினருக்கு இந்த ரத்த பரிசோதனையை அனுப்பி வைக்கிறார்.
இது ஒரு புதிய வைரஸ் எனவே மேல் தரப்பு உத்தரவு இல்லாமல் வெளியே கூற முடியாது என சக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதனை ஏய்பென் வெளியே தெரிவிக்க விரும்பி உள்ளார். ஆனால் மருத்துவ ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியினர் இந்த டாக்டரை அழைத்து எச்சரித்துள்ளனர்.
“வதந்திகளைப் பரப்புதல்” மற்றும் “ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவித்தல்” குற்றம் செய்ததாக அவர் கண்டிக்கப்பட்டார்.
இதனையடுத்து, வைரஸ் தொடர்பான செய்திகளையோ அல்லது படங்களையோ அனுப்ப ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாளிதழான கார்டியனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: நான் தான் இந்த புதிய வைரசை கண்டுபிடித்தேன். தொடர்ந்து வூஹான் மருத்துவமனைக்கு வந்த பலருக்கும் இது போன்ற தொற்று இருந்தது.
ஒரு நோயாளி பாதிக்கப்பட்டபோது தொடர்பான விழிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது உலகம் முழுவதும் நடக்கும் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் டாக்டர் ஏய் பென் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சீன அரசு அவரை தனிச்சிறையில் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago