Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலம்பிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலொன்றுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு ஆயுதப் படைகளுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படைகளின் (ஃபார்க்) முன்னாள் கொரில்லா தளபதிகள் குழுவொன்று ஆயுதந்தரித்ததற்கு மத்தியில் எல்லையில் இராணுவ ஒத்திகைகளை அறிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் காணொளியாக்கப்பட்டதாக கொலம்பிய அதிகாரிகள் நம்பும் மீள ஆயுதந்தரித்தலை காணொளியொன்றில் முன்னாள் ஃபார்க் கொரில்லாக்கள் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில் கொலம்பியாவில் ஆயுத முரண்பாடு மோசமடையும் எனவும், வெனிசுவேலாவில் ஆயுதக் குழுக்கள் விரிவடையும் எனவும் அஞ்சப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, வெனிசுவேலாவை நோக்கியதான கொலம்பியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு பதிலடியாக எச்சரிக்கையொன்றை பிரகடனப்படுத்துமாறு பொலிவேரிய ஆயுதப் படைகளின் உத்திநோக்கு நடவடிக்கைகள் தளபதிக்கும், எல்லையிலுள்ள அனைத்து இராணுவப் பிரிவுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒளிபரப்பில் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவுடனான எல்லையுடனுள்ள ஸுலியா, தஷிரா, அபுரே, அமெஸொனொஸ் மாநிலங்களில் ஒவ்வோராண்டும் இடம்பெறும் ஒரு தொகுதி இராணுவ ஒத்திகைகள் இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை இடம்பெறும் என ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ கூறியுள்ளார்.
இந்நிலையில், கருத்துத் தெரிவிக்க கொலம்பிய வெளிநாட்டமைச்சு மறுத்துள்ள நிலையில், வெனிசுவேலாவில் தாக்க திட்டமிடுவதை மீண்டும் மீண்டும் கொலம்பிய அதிகாரிகள் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொலம்பிய ஆயுதக் குழுக்களுக்கு பாதுகாப்பு புகலிடமொன்றை வெனிசுவேலா அரசாங்கம் வழங்குவதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவிக்கின்றது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago