2025 நவம்பர் 05, புதன்கிழமை

கோதாவரி ஆற்றில் படகு மூழ்கியது: 12 பேர் இறந்தனர்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நீர் மட்டம் உயர்ந்து வரும் கோதாவரி ஆற்றில் இயற்கை அழகைப் பார்வையிடும் றோயல் வசிஷ்ட படகு நேற்று முன்தினம் கவிழ்ந்ததில் குறைந்தது 12 பேர் மூழ்கியுள்ளதுடன், 25 பேரைக் காணவில்லை என பொலிஸாரும், உள்ளூர் ஊடக அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.

குறித்த படகானது 50 பயணிகளையும், 11 சிப்பந்திகளையும் கொண்டிருந்ததாகவும் அனைவரும் இந்தியர்கள் என ஆந்திரப் பிரதேச உள்நாட்டமைச்சர் மெகதோடி சுஷரிதா கூறியுள்ளார்.

இந்நிலையில், காணாமல்போனோரைக் கண்டுபிடிப்பதற்காக சுழியோடிகள், ஹெலிகொப்டர் உள்ளடங்கலாக மீட்பு அணிகள் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 24 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மெகதோடி சுஷரிதா கூறியுள்ளார்.

ஆந்திரப் பிரதேச தலைநகரான ஹைதரபாத்திலிருந்து 380 கிலோ மீற்றர் கிழக்காகவுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காஷுலாரு கிராமத்துக்கு அருகேயே குறித்த விபத்து இடம்பெற்றிருந்தது. சிங்கனபள்ளியிலிருந்து பிரபலமான சுற்றுலாத்துறை இடமான பபிகொன்டாலுக்கு சென்று கொண்டிருக்கும்போதே படகு விபத்துக்குள்ளாகியிருந்தது.

கோதாவரி ஆற்றானது அண்மையில் வெள்ளமெடுத்திருந்த நிலையில் குறித்த பாதையில் படகுகளை இயக்குவது தடை செய்யப்பட்டிருந்ததாகவும், எவ்வாறு சுற்றுலாப்பயணிகளை குறித்த படகு எடுத்துச் சென்றது என்பது தெளிவில்லாமல் உள்ளதாக மெகதோடி சுஷரிதா தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி ஹெலி கொப்டர் மூலமாக இன்று (16) பார்வையிட்டிருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X