Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோமா நிலையில் இருக்கும் அ.தி.மு.க ஆட்சி கவிழ்வது கனவல்ல என்றும் அது விரைவில் நனவாகும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர், முறையாக தேர்தலைச் சந்தித்து, 234 தொகுதிகளில், குறைந்தது 200 தொகுதிகளாவது, தி.மு.க வெற்றியடையும் என்றும் இழுபறியின்றி, கம்பீரமாக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க, ஐ.சியூவில் இருந்தால் சரி, காப்பாற்றிவிடலாம், ஆனால், அது, கோமா நிலையில் இருப்பதால், காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஆட்சியை கவிழ்க்க, கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள் என்று தொடர்ந்து தம்மை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இனிமேல் கனவெல்லாம் காண வேண்டிய அவசியம் இல்லை; நினைவாகவே விரைவில் நடக்கப்போகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
4 minute ago
14 minute ago
21 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
21 minute ago
25 minute ago