2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிட்னி விமான நிலையத்தில் பதற்றம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்ற ஆடவர் கைதாகியுள்ளார். இந்த  சம்பவம் இன்று (13)  காலை நடந்தது.

 

ஆடவர் அதிகாரியிடமிருந்து துப்பாக்கியைப் பலவந்தமாகப் பிடுங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி சுடப்பட்டது எனக் காவல்துறை தெரிவித்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்ட காணொளியில் ஆடவரை இருவர் தரையில் அழுத்திப் பிடித்திருப்பதையும் அதிகாரி தமது துப்பாக்கியைச் சோதனையிடுவதையும் காணமுடிந்தது.

சம்பவத்தைக் கண்டவர்கள் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டது என்றும் சம்பவயிடம் அருகே இருந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது என்றும் கூறினர்.

ஆடவர் கைதான பிறகு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .