2025 நவம்பர் 05, புதன்கிழமை

சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன் 2

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம், 28 நாள்கள் பயணத்துக்குப் பிறகு சந்திரனின் சுற்றுவட்டப்பாதைக்குள் இன்று (20) வெற்றிகரமாக நுழைந்தது.

சந்திரனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழ்நாட்டின் தலைந்கர் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ கிராம் எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 றொக்கெட் மூலம் கடந்த மாதம் 22ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட 16 நிமிடங்கள் 24 செக்கன்களில் விண்கலத்தை றொக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. பின்னர் பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 14ஆம் திகதி சந்திரனை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.

சந்திரனை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் நேற்று சேர்க்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி சந்திராயனின் திரவ இயந்திரம் நேற்றுக் காலை 1,738 செக்கன்கள் இயக்கப்பட்டது.

இதனால் நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சந்திரனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சந்திரயான்- 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லாண்டர் அடுத்த மாதம் இரண்டாம் திகதி பிரியும். அந்த லாண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் அடுத்த மாதம் ஏழாம் திகதி லாண்டரை சந்திரனில் மெதுவாகத் தரையிறக்குவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X