2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

சந்தைத் தாக்குதலில் 36 பொதுமக்களை கொன்ற ஆயுததாரிகள்

Editorial   / 2020 ஜனவரி 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன்மடெங்கா மாகாணத்திலுள்ள சந்தையொன்றின் மீதான பயங்கரவாதத் தாக்குதலொன்று என பேர்க்கினா பாஸோ அரசாங்கம் தெரிவித்த தாக்குதலில் 36 பொதுமக்கள் கடந்த நேற்று முன்தினம் கொல்லப்பட்டுள்ளனர்.

அலமெள கிராமத்திலுள்ள சந்தையொன்றுக்குள் நுழைந்த ஆயுதந்தரித்த ஆயுததாரிகள், அங்கு மக்களைத் தாக்கிய பின்னர் கட்டமைப்புகளை எரித்ததாக அறிக்கையொன்றில் பேர்க்கினா பாஸோ அரசாங்கம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கான பதிலளிப்பாக இரண்டு நாட்கள் தேசிய துக்க தின அனுஷ்டிப்புக்கு பேர்க்கினா பாஸோ ஜனாதிபதி றொஷ் மார்க் கபோரே அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, இத்தாக்குதலுக்கு யார் பொறுப்பு என உடனடியாகத் தெரியவரவில்லை.

அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய இஸ்லாமியக் குழுக்களால் அண்மைய மாதங்களில் சிவில், இராணுவ இலக்குகள் மீது பேர்க்கினா பாஸோவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X