2025 மே 14, புதன்கிழமை

சர்வதேச விமான நிலையத்தில் தீ பரவல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு குறித்த பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு படையினர் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறித்த பகுதிக்கு விரைந்தனர். பொலிஸாரின் உதவியுடன் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 1500-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளன.

குறித்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .