2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

சவுதியுடன் நெருக்கடி: யேமனிலிருந்து படைகளை வெளியேற்றும் அமீரகம்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 01 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகப் படைகளை 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறான அழைப்பை சவுதி அரேபியா ஆதரித்த நிலையில், யேமனிலிருந்து எஞ்சியுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக அமீரகம் செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்துள்ளது.

முன்னதாக தென் யேமனிய துறைமுகமான முகாலாவை சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்கியிருந்தனர். அமீரகத்துடன் தொடர்புபட்ட ஆயுதத் தொகுதி மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி கூறியிருந்தது.

யேமனின் பிரிவினைவாத தென் இடைக்கால சபையை தமது எல்லையை நோக்கிச் செல்லுமாறு அமீரகம் அழுத்தம் கொடுப்பதாக சவுதி குற்றஞ்சாட்டுகிறது. யேமனின் சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கத்தையே சவுதி ஆதரிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .