2025 மே 14, புதன்கிழமை

சாதனை படைத்த 104 வயது மூதாட்டி

Freelancer   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிக்காகோவை சேர்ந்த 104 வயதுடைய டோரத்தி என்ற மூதாட்டி ஒருவர்   13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பதாக  தனது 100 வயதில் ஸ்கை டைவ் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் முதலில் தனது 100 வயதில் செய்த போது பயந்ததாகவும் தற்போது தாமாக குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் விடுமுறை நாட்களில் மற்ற நாடுகளுக்கு சென்று சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன், ஸ்வீடனைச் சேர்ந்த 103 வயதான லின்னியா இங்கேகார்ட் லார்சன் என்பவரால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் மிக வயதான ஸ்கைடைவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த சாதனையை 104 வயதான மூதாட்டி டோரதி முறியடித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .