Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரிய எதிரணியின் பலமான இறுதிப் பிரதான இடத்துக்கெதிரான ரஷ்ய ஆதரவிலான வலிந்த தாக்குதலானது மூர்க்கமாகின்ற நிலையில், வான் தாக்குதல்களில் இரண்டு டசின்களுக்கும் அதிகமான பொதுமக்கள், வடமேற்கு சிரியாவில் கடந்த இரண்டு நாட்களில் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகமும், உள்ளூர் செயற்பாட்டாளர்களும் நேற்று தெரிவித்துள்ளனர்.
டெய்ர் ஷர்கி கிராமத்தில் இடம்பெற்ற வான் தாக்குதலொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, பெரும்பாலாக சிறுவர்களை உள்ளடக்கிய ஏழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளதுடன், ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வீச்சுக்களில் பிறிதொரு ஏழு பேர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
இந்நிலையில், அல்-ஹாஸ் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இறந்தவர்களில், கர்ப்பிணியொருவரும், அவரது பிறக்காத குழந்தையும் உள்ளடங்குவதாக உள்ளூர் செயற்பாட்டாளர்களும், மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகமும் தெரிவித்துள்ளது. பிறிதொரு இடத்திலிருந்து குறித்த இடத்தில் அடைக்கலம் தேடியிருந்தபோதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குண்டுத் தாக்குதலால், இலக்கு வைக்கப்படும் பகுதிகளிலிருந்து அலையலையாக மக்கள் வடக்காகச் செல்வதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகமும், உள்ளூர் செயற்பாட்டாலர்களும் தெரிவிக்கின்றனர்.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025