2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘சிரியாவின் வான் தாக்குதலில் 12 பேர் பலி’

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள வடமேற்கு சிரியாவின் தென் இட்லிப் மாகாணத்திலுள்ள மார் ஷொரீன் கிராமத்திலுள்ள பிரபலமான சந்த்யையொன்றின் மீது சிரிய வான் படையால் நடாத்தப்பட்டதென நம்பப்படும் வான் தாக்குதலில் குறைந்தது 12 பேர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக மீட்புப் பணியாளர்களும், அங்குள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.

சிரிய இராணுவத்தின் ஜெட்கள் என கண்காணிப்பாளர்கள் தெரிவித்த விமானங்களால் போடப்பட்ட குண்டுகளால் குறித்த சந்தையின் பிரதான வீதியில் உயிரிழப்புகளும், அழிவும் ஏற்பட்டதுடன், பலர் காயமடைந்ததாக அங்குள்ளவர்களும், மீட்புப் பணியாளர்களும் கூறியுள்ளனர்.

வடமேற்கு சிரியாவிலுல்ள எதிரணியின் இறுதியிடத்தின் மீதான ரஷ்யா தலைமையிலான தாக்குதலானது ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழுக்களும், மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களை இலக்கு வைத்ததை ரஷ்ய பாதுகாப்பமைச்சு மறுத்துள்ள நிலையில், மார் ஷொரீன் இடத்தில் அல் கொய்தா ஆயுததாரிகள் மீது நேற்று முன்தினம் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டு, அவர்களின் தளங்களை அழித்ததுடன், பல பயங்கரவாதிகளைக் கொன்றதாக சிரிய அரச ஊடகம் கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X