Freelancer / 2025 மார்ச் 09 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பாதுகாப்புப் படையினர், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்.டி.எஸ்) கிளர்ச்சி படை சிரியாவை கைப்பற்றியது. அதையடுத்து அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார். இந்நிலையில், அந்த நாட்டின் வடமேற்கில் உள்ள கடலோர நகர பகுதிகளில் சிரியா பாதுகாப்பு படை மற்றும் ஆசாத் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு தங்கள் படை பலத்தை அதிகரிக்கும் வகையில் கூடுதல் படையினரை இடைக்கால அரசு அனுப்பியது.
இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். (a)
32 minute ago
39 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
3 hours ago
05 Nov 2025