Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மே 04 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனவெறியால் சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய நபருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரைச் சேர்ந்த ஜோசப் (வயது 73) என்பவரது வீட்டில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது இனவெறியால் ஜோசப் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற சிறுவனின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதனையடுத்து ஜோசப்பை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு இல்லினாய்ஸ் மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago