2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறைக் கலவரம்:130 கைதிகள் தப்பியோட்டம்

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் உள்ள மோங்கோ நகரில்,சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் நடத்திய போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு, 130க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் உள்ள மோங்கோ என்ற நகரத்தில் அமைந்திருக்கும் சிறைச்சாலையில் சுமார் 500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இதற்கிடையே அங்குள்ள கைதிகள் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், குவேரா மாகாண கவர்னர் மோங்கோ சிறைச்சாலையை பார்வையிட சென்றிருந்தார். அப்போது சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர்.

பின்னர், அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 3 பேர் பலியாகினர்.  பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி 130க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X