2025 நவம்பர் 05, புதன்கிழமை

சிறைக்கைதிகளிடையேயான மோதல்களில் 15 பேர் இறந்தனர்

Editorial   / 2019 மே 28 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட பிரேஸிலுள்ள அமெஸனஸ் மாநிலத்திலுள்ள சிறைச்சாலையொன்றில், சிறைக்கைதிகளிடையேயான மோதல்களில் 15 பேர் நேற்று முன்தினம் இறந்ததாக, அப்பிராந்திய சிறைச்சாலை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அமெஸனஸ் மாநிலத் தலைநகர் மனாஸிலிருந்து 28 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள குறித்த சிறைச்சாலையில் பார்வையிடும் நேரத்தின்போது, இலங்கை நேரப்படி நேற்று முன்தினமிரவு 8.30 மணியளவிலேயே மோதல்கள் வெடித்துள்ளன.

குறித்த சம்பவமானது சிறைக்கைதிகளிடையேயான மோதலொன்று என செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்த கேணல் மார்கோஸ் வின்சியஸ் அல்மெய்டா, பார்வையிடும் நேரத்தில் ஒருபோதும் இறப்புகள் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.

சில சிறைக்கைதிகள், கூர்மையாக்கப்பட்ட பல் துலக்கிகளால் குத்தப்பட்டதாகவும், ஏனையோர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்த மார்கோஸ் வின்சியஸ் அல்மெய்டா, என்ன காரணத்தால் மோதல் இடம்பெற்றது என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் அதிகாரிகள் பதிலளிப்புகளை மேற்கொண்டதாகவும், நிலமை மோசமாவதை தடுத்ததாக மார்கோஸ் வின்சியஸ் அல்மெய்டா மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் ஏறத்தாழ 20 மணித்தியாலங்கள் நீடித்த சிறைக் கலகத்தால் 56 பேர் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் மூன்றாவது மிக அதிகமான சிறைக்கைதிகளை பிரேஸில் கொண்டு காணப்படுகின்ற நிலையில், உத்தியோகபூர்வ தரவுகளின்படி 2016ஆம் ஆண்டு ஜூனில் 726,712 சிறைக்கைதிகள் காணப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X