Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 18 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் லூசியானா மாநிலம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில், தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உட்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறைச்சாலையில் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்த பாதுகாப்பையும் மீறி கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதிகள் சிலர், வெள்ளிக்கிழமை (16) நள்ளிரவு நேரம் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். பின்னர் கழிப்பறையின் பின்னால் உள்ள துளை வழியாக 10 கைதிகள் ஏறி குதித்து தப்பினர். ஆனால் இந்த சம்பவம் நடந்த 7 மணி நேரத்துக்குப் பிறகே சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கமெரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தப்பி சென்ற கைதிகள் சிறையில் இருந்து வெளியேறியதும் சீருடைகளை மாற்றி விட்டு வேறு ஆடைகளை அணிவது தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேகம் வராத வகையில், குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றது கண்காணிப்பு கமெராவில் பதிவாகி உள்ளது. கைதிகள் தப்பிச் சென்ற பாதையைச் சுற்றியுள்ள சுவரில் பொலிஸாருக்கு சவால்விடும் வகையில் வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். குறிப்பாக, "உங்களால் முடிந்தால் எங்களைப் பிடியுங்கள்" என்று எழுதியுள்ளனர். ஆபாச வார்த்தைகளையும் எழுதியுள்ளனர்.
தப்பியோடியவர்களில் இதுவரை 4 கைதிகள் சிக்கியுள்ளனர். மற்ற கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், கைதிகள் நள்ளிரவு நேரம் தங்களது அறையில் இருந்து வெளியேற ஊழியர்கள் சிலர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதிகளுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 minute ago
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
3 hours ago
6 hours ago